சவாலான சூழலில் சமூக ஒற்றுமையின் வெற்றி – ஜோசுவா நிலையம் வருடாந்த விளையாட்டு விழா 2026
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு – A–Z அமைப்பின் ஏற்பாட்டில் Software Support – Norway Tamil Sangam ஜோசுவா நிலையத்தின் வருடாந்த விளையாட்டு விழா 2026 ஜனவரி 17ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9.00 மணிக்கு Joshua Center, Sunnampu Sulai Street, Ward No. 1, Kaively, Puthukkudiyiruppu, Mullaitivu. ல் அமைந்துள்ள ஜோசுவா நிலைய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக கிராமசேவகர் கணபதிபிள்ளை தமிழ்செல்வன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் சொக்கலிங்கம் சோதிலட்சுமி அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை கௌரவித்தனர். சிறப்பு விருந்தினர்களாக பெண் தொழிலதிபர் கிருஸ்ணதாஸ் சாஜிராணி மற்றும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் நீக்ளஸ் நிக்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு குறைவாக காணப்படும் சூழலில் இவ்விளையாட்டு விழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு செல்லும் பாதை சிரமமானதாக இருந்ததுடன், பொருட்கள் கொண்டு செல்ல கூட இயலாமை போன்ற சவால்களும் இருந்தன.
இத்தகைய சவால்களை மீறியும், போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் காட்டிய ஆர்வம், ஒற்றுமை மற்றும் உற்சாகம் பாராட்டத்தக்கதாக இருந்தது. அவர்களின் பங்கேற்பும் முயற்சியும் சமூகத்தில் நேர்மறை மாற்றத்தை உருவாக்கும் வகையில் அமைந்தது.
இவ்விழா, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பிள்ளைகளின் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது. சமூக அக்கறை கொண்ட நற்பண்பாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்போர், இத்தகைய முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கினால், இப்பகுதி மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அது உறுதுணையாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புக்கு: A–Z Oslo அல்லது ஜோசுவா நிலையம்

















